மின்சாரம் பாய்ந்து ஊராட்சியில் பணிபுரியும் பம்ப் ஆப்பரேட்டர் உள்பட இருவர் பலியாகினர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா வேப்பங்குப்பம் ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் மின்விளக்கு கம்பம் நடுவதற்காக, வேப்பங்குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டர் ஆக பணிபுரியும் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (45) மற்றும் ஏரி காலனி பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (55) இருவரும் மின்விளக்கு கம்பத்தை நடுவதற்காக கம்பத்தை தூக்கி நிறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், மின் கம்பியின் மின்விளக்கு கம்பம் மோதி, c மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பம்ப் ஆப்ரேட்டர் முத்துக்குமரன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் பலியாகினர்.
இதையும் படிக்க: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கையும்களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்!
இந்த சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேப்பங்குப்பம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வரும் முத்துக்குமரனுக்கு, உதவி செய்ய அசோக் குமார் உடன் வந்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்று உள்ளது.