அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் பதவி விலகினார்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் மீண்டும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

News image

பாபர் அசாம்

Updated On :2 அக்டோபர் 2024, 12:12 pm IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் மீண்டும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர், அண்மையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடர்லும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

அதன்பின், டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் பாபர் அசாம். ஆனால், அதிலும் பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாத நிலையில், மீண்டுமொருமுறை பாபர் அசாமின் கேப்டன்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. தற்போது டெஸ்ட்டில் கேப்டனாக ஷான் மசூத் கேப்டனாக இருக்கிறார்.

இந்த நிலையில் இரண்டாவது முறையாக பாபர் அசாம் பதவி விலகியதைத் தொடர்ந்து முகமது ரிஸ்வான் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாம் 2020 ஆம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நியமிக்கப்படும் முன்பு 2019 ஆம் ஆண்டு டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அக்டோபர் 7 ஆம் தேதி இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் பாபர் அசாம் பதவி விலகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இதுகுறித்து பாபர் அசாம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நான் உங்களுக்குச் செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த மாதம் கூறியபடியே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். அணியை வழிநடத்துவது பெருமையானது தான். ஆனால், நான் என் பொறுப்பில் ஒரு வீரராக இருக்க விரும்புகிறேன்.

கேப்டனாக இருப்பது பயனளிக்கக் கூடியது என்றாலும், அது எனக்கு பணிச்சுமையாக இருக்கிறது. உங்களது ஆதரவுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் என்று நன்றியுள்ளவனாக இருப்பேன். ஒரு வீரராக அணிக்காக எனது பங்களிப்பை அளிப்பேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி வருகிற நவம்பரில் மூன்று டி20 மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேயிலும் விளையாடவிருக்கிறது.

3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20, 2 டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்கா செல்லும் பாகிஸ்தான் அணி மீண்டும் மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து தொடருக்காக தாயகம் திரும்புகிறது.

அடுத்தாண்டு தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.