
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் அதே இடத்தில் நீடித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் நிலவ கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நகராமல் அதே இடத்தில் நீடித்து வருகிறது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக். 15) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் நிலவ கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | கடலூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், ஓமன் கடற்கரையில் மத்திய அரபிக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மையம் கொண்டுள்ளது.
இது கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.