நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்.

News image

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.

Updated On :24 அக்டோபர் 2024, 9:04 pm IST

அடையார் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணி காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் அடையாறு சந்திப்பில் மெட்ரோ பணிகளை மேற்கொள்ள உள்ளதால், அப்பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்று வழிகள் முன்மொழியப்பட்டு 26.10.2024 மற்றும் 27.10.2024 ஆகிய இரண்டு நாள்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.

* சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அடையாறு பேருந்து டிப்போ சந்திப்பில் காந்தி நகர் 2வது குறுக்குத் தெரு வழியாக ராமசந்திரா ஆதித்தனார் சாலையில் வலது புறம் திரும்பி தேஸ்முக் துர்காபாய் சாலை அடைந்து இடது புறமாக திரும்பி திரு.வி.கா பாலம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

ஒரு வழிச்சாலையாக இருந்த அடையார் மேம்பாலம் இரு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

* திரு.வி.கா பாலத்திலிருந்து அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், OMR மற்றும் மத்திய கைலாஷ் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை வழக்கம் போல் செல்லலாம்.

* S.V பட்டேல் சாலையிலிருந்து LB சாலை வழியாக அடையார், திருவான்மியூர் மற்றும் பெசன்ட் நகர் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை வழக்கம் போல் செல்லலாம்.

* L.B சாலை வழியாக கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் மற்றும் கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை வழக்கம் போல் செல்லலாம்.

பெசன்ட் நகரிலிருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை வழக்கம் போல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.