இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்ட இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில்
ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்ட இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில்
Published on
Updated on
1 min read

ஜபல்பூர்: இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில், நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் "இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் (22191) இரண்டு பெட்டிகள் ஜபல்பூர் நிலையத்தின் 6 ஆவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது" என்று அந்த அதிகாரி கூறினார்.

ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்ட இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில்
ஹரியாணா தேர்தலில் வினேஷ் போகத் போட்டி: புனியாவுக்கு முக்கிய கட்சிப் பதவி

மேலும் ரயில் மெதுவாக வந்ததால் நல்வாய்ப்பாக பெரும் உயிரிழப்பு, சேதங்கள் போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com