இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்.

Updated On :

பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்.

பாஜக செயற்குழு உறுப்பினரான இருந்த மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த முன்னாள் எம்.பி. வா. மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (12.9.2024 வியாழக் கிழமை), நேரில் சந்தித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொள்ளுமாறு கடிதம் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, பரிசீலனை செய்து, வா. மைத்ரேயனை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியில் இருந்த மைத்ரேயன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டப்பின், பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.