மேட்டூர் அணை நீர்வரத்து 6,619 கனஅடி!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,619 கன அடியாக குறைந்துள்ளது.


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,619 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதன்படி வியாழக்கிழமை காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,619 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 114.14 அடியிலிருந்து 113.12 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 82.92 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...