லாரி சக்கரத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

சாலை விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி.
accident
சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினர்.Din
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சென்றுக்கொண்டிருந்த நிலையில், டேங்கர் லாரியை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கியதால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சாலை விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜா புதுக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகனத்தில் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில், வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர்.

இந்த நிலையில், லாரி இருசக்கர வானத்தின் பின்புறத்தில் மோதியதால் 4 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியாகினர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com