நடிகர் ஜூனியர் என்டிஆரின் 60 அடி உயர கட்-அவுட் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

நடிகர் ஜூனியர் என்டிஆரின் 60 அடி உயர கட்-அவுட் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

ஹைதராபாத்தில் திரையரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நடிகர் ஜூனியர் என்டிஆரின் 60 அடி உயர கட்-அவுட் திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

ஹைதராபாத்தில் திரையரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த நடிகர் ஜூனியர் என்டிஆரின் 60 அடி உயர கட்-அவுட் திடீரென தீப்பிடித்த எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோலிவிட்டின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தேவாரா பாகம் 1. இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர் நடித்திருக்கிறார்.

மேலும் இவர்களுடன் சேர்ந்து சயிஃப் அலி கான் தல்லூரி ராமேஷ்வரி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ, நரேன், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மீண்டும் களத்தில் இறங்கிய அஜித் குமார்!

கொரட்டலா சிவா இயக்கி, எழுதி இருக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது. கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் படம் வெளியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

முன்னதாக தேவாரா வெளியீட்டை முன்னிட்டு ஹைதராபாத் ஆர்டிசி எக்ஸ் சாலையில் உள்ள சுதர்சன் திரையரங்கம் முன்பு 60 அடி உயரத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு கட்-அவுட் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டிய போது அந்த கட்-அவுட் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினம் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com