கோப்புப் படம்
கோப்புப் படம்

இஸ்ரேலை ஆதரிக்கும் பிரபல பன்னாட்டு நிறுவனக் கடைகள் மீது தாக்குதல்!

வங்கதேசத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல நிறுவனங்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
Published on

வங்கதேசத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் நேற்று (ஏப்.7) ஏராளமான மக்கள் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினர்.

இந்தப் போராட்டங்களானது சில மணிநேரங்களில் வன்முறைக்களமாக மாறி டாக்கா, ஷைலட், சட்டோக்ராம், குல்னா, பரிஷால், கும்மில்லா ஆகிய நகரங்களிலுள்ள பாட்டா, கே.எஃப்,சி. மற்றும் டாமினோஸ் பிட்சா ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள்.

இந்தத் தாக்குதலானது காஸாவில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான இஸ்ரேலை அந்நிறுவனங்கள் ஆதரிப்பதினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இரவு முதல் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 56 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அங்குள்ள விடியோ பதிவுகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் வங்கதேச நேஷனலிஸ்ட் கட்சி, வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகள் இஸ்ரேலைக் கண்டித்து இரண்டாவது நாளாக இன்று (ஏப்.8) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: போர்ச்சுகலில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com