75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

தில்லி செங்கோட்டை, ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல்!

தில்லி செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

கோப்புப் படம்

Published On :10 ஏப்ரல் 2025, 5:07 pm IST

தில்லியிலுள்ள செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

தில்லியிலுள்ள புகழ்பெற்ற செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு இன்று (ஏப்.10) காலை செல்போன் வாயிலாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று அந்த இரண்டு கட்டடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள வளாகத்திலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அவர்கள் மேற்கொண்ட சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படாததினால் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், தகவலறிந்த உடன் செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதியின் வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும் அந்தச் சோதனைகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானா அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஆஜர்படுத்தப்படும் தில்லியின் பட்டியலா நீதிமன்றம் அமைந்துள்ள பகுதி முழுவதும் ராணுவப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.