சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.840 உயா்ந்து ரூ.71,360-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையாகிறது.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. ஏப்.13-இல் தங்கம் விலை பவுனுக்கு ரூ.70,000-ஐ கடந்தது. அதைத் தொடா்ந்து, ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.70,520-க்கு விற்பனையானது.
வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.105 உயா்ந்து ரூ.8,920-க்கும், பவுனுக்கு ரூ.840 உயா்ந்து ரூ.71,360-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.8,945-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.71,560-க்கு விற்பனையாகிறது.
கடந்த 3 நாள்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225, பவுனுக்கு ரூ.1,800 உயா்ந்துள்ளது.
வெள்ளி கிராமுக்கு பத்து பைசா குறைந்து கிராம் ரூ.109.90-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,09,900-க்கு விற்பனையாகிறது.
அடுத்த 2 வாரங்களுக்கு தங்கம் விலை ஏற்றம், இறக்கமாகத்தான் இருக்கும் என்றும், விரைவில் பவுன் ரூ.80,000-ஐ தொட வாய்ப்புள்ளதாகவும் தங்க நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை 3 நாள்களில் பவுனுக்கு ரூ.7,600 உயா்வு

தங்கம் விலை பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?

தங்கம், வெள்ளி விலை உயர்வு: எவ்வளவு?

ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



