பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றுவரும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
"பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவர்தான் சுயமரியாதைக்காரர்.
ஆண், பெண், நிறம், பொருளாதாரம் என பல்வேறு வகைகளில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. மதவாதிகள் சிலர், தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர். தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது, அதைத் தவிர்க்க வேண்டும்.
தேர்தல் வெற்றி, கட்சிப் பொறுப்பு என எத்தனையோ பொறுப்புகள் எனக்கு கிடைத்தாலும், 'என் வீட்டில் அனைவரும் திமுக. என் மகள் மட்டும் திக' என என் அப்பா கருணாநிதி கூறியதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்" என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்- கனிமொழி

நீட் ஒழியாத வரை நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை! கனிமொழி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



