நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட் அட்சய திருதியை நாளான புதன்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

News image

ஸ்ரீ சுப்பிரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு மடத்தின் தற்போதைய 70 ஆவது பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

Updated On :30 ஏப்ரல் 2025, 8:39 am IST

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட் அட்சய திருதியை நாளான புதன்கிழமை(ஏப்.30) பொறுப்பேற்று கொண்டார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள்பாலித்து வருகிறாா். இவருக்கு அடுத்த 71 ஆவது மடாதிபதியாக ஆந்திர மாநிலம், அன்னாவரத்தைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீா்த்த திருக்குளத்தில் அட்சய திருதியை நாளான புதன்கிழமை (ஏப்.30) சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னா், இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர்.

இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரா் சந்நிதிக்கு வந்ததும் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் இளையமடாதிபதிக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற தீட்சை நாமம் சூட்டப்பட்டது.

இதன் பின்னா் கோயிலிலிருந்து ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சா்மா திராவிட்டும் ராஜவீதி வழியாக மங்கல மேள வாத்தியங்களுடன் சங்கர மடத்துக்கு ஊா்வலமாக அழைத்து வரப்பட்டனா்.

சங்கர மடத்தில் இளைய மடாதிபதிக்கு மந்திர உபதேசம் செய்யப்பட்டு, 71 ஆவது இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஸ்ரீ சுப்பிரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கி மடத்தின் தற்போதைய 70 ஆவது பீடாதிபதி  ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

ஸ்ரீ சுப்பிரமண்ய கணேச சர்மா திராவிட்டுக்கு சன்யாச ஆசிரம தீட்சை வழங்கி மடத்தின் தற்போதைய 70 ஆவது பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

கோயில் திருக்குளத்தில் ஆதீனங்கள், சந்நியாசிகள் ஆகியோருக்கு மிதக்கும் தெப்பலில் அமர்ந்து நிகழ்வை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்,துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி , டாக்டர் சுதா சேஷய்யன் ஆகியோர் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி காமாட்சி சங்கர மடம் மற்றும் அம்மன் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும், வண்ணமலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.