ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது: நடிகர் பிரகாஷ் ராஜ்

இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது ’கெட் அவுட் மோடி’ என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

News image
நடிகர் பிரகாஷ் ராஜ்(கோப்புப்படம்)
Updated On :21 பிப்ரவரி 2025, 5:42 am

DIN

தமிழகத்தில் திமுகவினரும் - பாஜகவினரும் கெட் அவுட் மோடி... கெட் அவுட் ஸ்டாலின்... என்ற ஹேஷ்டேக்கை போட்டி போட்டு ட்ரெண்ட் ஆக்கி வரும் நிலையில், இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது ’கெட் அவுட் மோடி’ என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கான கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக தலைவர்களும், மாநில அரசுக்கு எதிராக பாஜக தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றால் ’கோ பேக் மோடி’ என்பதற்கு பதிலாக ’கெட் அவுட் மோடி’ எனத் துரத்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, திமுக ஊடக அணியினரின் ’கெட் அவுட் மோடி’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் டிரெண்டானது.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டை ரெண்டிங்கை தொடங்கி வைத்த 3 மணிநேரத்திற்குள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக 3 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது ’கெட் அவுட் மோடி’ என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.

ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. ’கெட் அவுட் மோடி’ என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.