பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!

அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்பு.
பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!
Published on
Updated on
1 min read

அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின்னர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

அந்தவகையில் அமெரிக்காவின் உளவு அமைப்பான எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் என்பவரை நியமித்தார்.

காஷ் படேல் வலிமையானவர் என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் காஷ் படேல் அதிகாரப்பூர்வமாக எஃப்.பி.ஐ. இயக்குநராக இன்று(பிப். 21) பதவியேற்றுக்கொண்டார். அவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். காஷ் படேல் 10 ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

எஃப்.பி.ஐ. மேலும் வெளிப்படையாக இருக்க முயற்சிப்பேன் என்றும் அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் மீது எஃப்.பி.ஐ. நடவடிக்கை எடுக்கும் என்றும் காஷ் படேல் கூறியுள்ளார்

கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றது காஷ் படேல் மட்டுமல்ல. முன்னதாக இந்திய வம்சாவளி சுகாஷ் சுப்பிரமண்யமும் கீதையை வைத்து பதவியேற்றுள்ளார். சுகாஷ், இந்த முறை தேர்தலில் விர்ஜினியாவில் ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

யார் இந்த காஷ் படேல்?

காஷ் படேலின் பெற்றோர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இவர் நியூயார்க், கார்டன் சிட்டியில் 1980ல் பிறந்தார். ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை படிப்பும் பேஸ் சட்டப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கிய அவர் அமெரிக்க அரசில் பல உயர் பதவிகளில் இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com