திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புத்தாண்டில் முதல்வரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற அமைச்சர்கள்!

புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து தமிழக அமைச்சர்கள் வாழ்த்துப் பெற்றனர்.

News image
Updated On :1 ஜனவரி 2025, 1:57 pm IST

புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து தமிழக அமைச்சர்கள் வாழ்த்துப் பெற்றனர்.

2024-ஆம் ஆண்டு நிறைவடைந்து 2025-ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு பிறந்ததையடுத்து, மக்கள் அனைவரும் புத்தாண்டை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை காமராஜா் சாலையில் உள்ள மணிக்கூண்டை சுற்றிலும் வண்ண விளக்குகள் அலங்கரித்தன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மெரீனா கடற்கரைப் பகுதி களைகட்டியது.

பெசன்ட் நகர் கடற்கரையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் கூடி நின்று புத்தாண்டை வரவேற்றனர்.

இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (ஜன. 1) முகாம் அலுவலகத்தில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ். ஜெகத்ரட்சகன், கனிமொழி ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.