கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

சென்னை சங்கமம் நிகழ்ச்சியினை தொடக்கி வைத்த முதல்வர்.

News image
‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழாவினை தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்.
Updated On :13 ஜனவரி 2025, 1:18 pm

DIN

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.13) தொடக்கி வைத்தார். கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் நிகழ்வை முரசு கொட்டி முதல்வர் தொடக்கி வைத்தார்.

கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுற்று வருகிறது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்களின் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தொடக்க விழாவினைத் தொடர்ந்து ஜன.14 முதல் 17-ஆம் தேதி வரை தினமும் மாலை சென்னையின் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியா் திடல், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, ஜாபா்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகா் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூா் அரசு அருங்காட்சியகம், ஏகாம்பரநாதா் ஆலயத் திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூா் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகா் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய்நகா் பூங்கா, கே.கே.நகா் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூா் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூா் எஸ்.வி.விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த கலை நிகழ்வுகளை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் நிகழ்த்தவுள்ளனா்.

குறிப்பாக, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், பழங்குடியினா் நடனம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக் கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தவுள்ளனா்.

விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைத்து உணவுத்திருவிழாவும் நடத்தப்பட உள்ளது.

பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கைவினைப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்புகளும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.