சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இந்தியா கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு!

இந்துத்துவா சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய், இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

News image

தவெக தலைவர் விஜய்

Updated On :18 ஜனவரி 2025, 12:43 pm IST

இந்துத்துவ சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய், இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'பரந்தூர், ஏகனாபுரம் பகுதி எனது சட்டப்பேரவைத் தொகுதி. நான் பலமுறை அங்கு சென்றிருக்கிறேன். மக்களிடம் பேசியிருக்கிறேன்.

மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லியிருக்கிறேன். மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.

விஜய் தனது கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகப் பேசினார். மதவாத சக்தியை, இந்துத்துவ சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருக்கும் அவரது கொள்கை, கோட்பாட்டிற்கும் எல்லோருக்கும் நல்லது' என்று கூறினார்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை தவெக தலைவர் விஜய், வருகிற 20 ஆம் தேதி சந்திக்கவிருக்கிறார்.

அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் முதல்முறையாக போராட்டக் களத்திற்கு நேரடியாக செல்லவிருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.