தென் கொரியா: ஒரு மாதத்திற்குள் தீப்பிடித்த மற்றொரு விமானம்! 176 பயணிகள் மீட்பு!

தென் கொரியா விமான நிலையத்தில் தீப்பிடித்த விமானத்தைப் பற்றி...
விமானத்தில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர்.
விமானத்தில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர்.
Published on
Updated on
1 min read

தென் கொரிய விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்தைத் தொடர்ந்து அதில் பயணித்த 176 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தென் கொரியாவின் புஸான் நகரத்தின் கிம்ஹாயெ சர்வதேச விமான நிலையத்திலிருந்து, ஏர் புஸான் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று (ஜன.28) இரவு ஹாங்காங் நோக்கி புறப்பட தயாரான போது அதன் பின்புற பாகங்களில் தீப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்திலிருந்த 169 பயணிகள், 6 பணியாளர்கள் மற்றும் 1 பொறியாளர் ஆகியோர் அவசரக்கால கதவுகள் வழியாக உடனடியாக மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து, அந்நாட்டின் தேசிய தீயணைப்பு ஆணையம் கூறியதாவது, இந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இரவு 11.31 மணியளவில் விமானத்தில் பற்றிய தீ மொத்தமாக அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிக்க: இந்தியா-அமெரிக்கா பிணைப்பே என்னை உருவாக்கியது-மைக்ரோசாஃப்ட் தலைவா் சத்யா நாதெள்ளா

இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது ஏ-321 ரக விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2024 டிச.29 அன்று தென் கொரியா நாட்டின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று கான்கிரீட் சுவரில் மோதி தீப்பிடித்தது. இதில் 85 பெண்கள் உள்பட 179 போ் பலியாகினர். இந்த விபத்து நிகழ்ந்து சரியாக ஒரு மாதத்திற்குள் (ஜன.28) மற்றொரு விமானம் தீப்பிடித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com