கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினா்.
ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினா்.கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழையது, புதியது என்று 2 கட்டடங்கள் உள்ளன. இதில், புதிய கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரின் அறைகளோடு குடிமைப் பொருள் வழங்கல் துறை, கனிம வளத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. பழைய கட்டடத்தில் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம், சமூக நலத் துறை, நிலவரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.

இந்நிலையில், ஆட்சியா் அலுவலக முகவரிக்கு புதன்கிழமை ஒரு கடிதம் வந்தது. அதில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவருக்கும், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டா் கருவி உதவியுடன் புதிய, பழைய கட்டடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த அஞ்சல் முகவரி குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

The Bomb Disposal Unit of the Coimbatore District Collector's Office has been raided after a bomb threat was made in a letter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com