தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன.
முதல் நாளில் பள்ளி வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனிடையே பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், நலத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் இன்று தீா்ப்பளித்துள்ளது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பின்றி ஆயுள் தண்டனையுடன், ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி எம். ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
11 பிரிவுகளில் குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளார்.
30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அவருக்கு சிறையில் எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்றும் மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கடுங்காவல் சிறைத் தண்டனை போல, ஞானசேகரனுக்கு சிறையில் எந்த சலுகைகளும் காட்டக் கூடாது என்றும் ஞானசேகரன் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலை மாணவியை கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள், ஆதாரங்களை அழித்தற்கு 3 ஆண்டுகள், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறை, கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டபோது, ஞானசேகரன் செல்ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பு என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி கூறியிருக்கிறார். மேலும் படிக்க..
நார்வே செஸ் போட்டியின் ஆறாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்செனை இந்திய வீரர் டி.குகேஷ் தோற்கடித்துள்ளார்.
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸை குகேஷ் முதல்முறையாக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் படிக்க...
கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னையை அரசியலாக்க வேண்டாம், நாம் எதிரிகள் கிடையாது, அனைவரும் நண்பர்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் படிக்க...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை சரிதான், ஆனால் அவருக்கு உதவியவர்கள் யார்? அவரது குற்றத்தின் பின்புலம் என்ன? யார் அந்த சார்? என்பதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் படிக்க...
இன்றைய நிலவரப்படி(ஜூன் 2) நாட்டில் தற்போது 3,961 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கேரளத்தில் 1,435 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் படிக்க...
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர் சில நாள்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
கடந்த 10 ஆண்டுகளில் தெலங்கானா மக்களின் விருப்பங்கள் இன்னும் நிறைவேறவில்லை என நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, பங்கேற்காமல் புறக்கணிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படிக்க..
கடந்த ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாத யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரித்திருந்தாலும், மறுபக்கம் பணப்புழக்கமும் அதே வேகத்தில்தான் இருக்கிறது என்கின்றன தரவுகள் மேலும் படிக்க..
லாச்சென் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து, வடக்கு சிக்கிமின் சட்டென் பகுதியில் உள்ள ராணுவ முகாம் நிலச்சரிவால் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டது.
நிலச்சரிவில் சிக்கிய 3 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான 9 வீரர்களை தேடும் பணியை ராணுவ வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க...
பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த 9 வயது சிறுமி சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகிய சம்பவம் ஒரு வாரத்துக்குப் பிறகே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் படிக்க..
தூய்மையான சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 'தூய்மை மிஷன்' திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைக்க இருக்கிறார்.
ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் படிக்க...
தங்கம் விலை காலையில் ரூ. 240, மாலையில் ரூ.880 என ரூ. 1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும், ஒரு கிராம் ரூ. 9,060-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.