தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி நீக்கம்

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு தொடர்ந்து எதிா்ப்பு எழுந்த நிலையில், மனுஸ்மிருதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழகம்
தில்லி பல்கலைக்கழகம்
Published on
Updated on
2 min read

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிராக தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இருந்து மனுஸ்மிருதி நீக்கப்படுவதாக பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் மற்றும் திறந்தவெளி பல்கலை படிப்புகள் என எந்த படிப்புகளிலும் மனுஸ்மிருதி கற்பிக்கப்படாது என்பதை தில்லி பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020 இன் ஒரு பகுதியாக, தில்லி பல்கலைக்கழகத்தில் தர்மசாஸ்திர ஆய்வுகள் என்ற புதிய பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியை முதன்மைப் பாடமாகச் சேர்க்கப்பட்டது. இதில் ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் மற்றும் அர்த்தசாஸ்திரம், போன்ற நூல்களையும் உள்ளடக்கிய வர்ணாசிரமம் மற்றும் சாதி அமைப்பு எவ்வாறு "சமூகத்தை ஒழுங்குபடுத்துகிறது" என்று மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

"நாகரிக சமூக ஒழுங்கை" உருவாக்குவதில் திருமணத்தின் பங்கு மற்றும் ஒழுக்கநெறிகள் தனிப்பட்ட நடத்தையை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதையும் பாடத்திட்டம் உள்ளடக்கும் என்று தகவல்கள் வெளியானது.

தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து மனுஸ்மிருதி நீக்கம்

கடந்த ஆண்டு, தில்லி பல்கலைக்கழக சட்டப் படிப்புகளில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களைச் சோ்ப்பது சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு ஆசிரியா்கள் மற்றும் குழுவைச் சாா்ந்த உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், அப்போது நீக்கப்பட்டது.

இந்த முறை, சமஸ்கிருத பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் விமர்சனங்கள், எதிா்ப்புகள் எழுந்தது. பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இருந்து மனுஸ்மிருதி நீக்க முடிவு செய்துள்ளோம் என பல்கலைக்கழக துணைவேந்தர் யோகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக வியாழக்கிழமை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில்,

சமஸ்கிருத பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதி அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்புத் தெரிவித்த வந்த நிலையில், பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இருந்து மனுஸ்மிருதி நீக்க முடிவு செய்துள்ளோம்.

தில்லி பல்கலைக்கழகம் வழங்கும் இளங்கலை சமஸ்கிருதம் மற்றும் திறந்தவெளி பல்கலை படிப்புகள் உள்பட எந்த படிப்புகளிலும் மனுஸ்மிருதி கற்பிக்கப்படாது என்பதை தில்லி பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இளங்கலை வரலாற்று (ஹானர்ஸ்) பாடத்தில் மனுஸ்மிருதி சாா்ந்த பாடங்களுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘வெட்கக்கேடான நடவடிக்கை’

இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாணவர் குழுவின் தேசியத் தலைவர் வருண் சௌத்ரி, “ தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மனுஸ்மிருதியை சேர்ப்பது வெட்கக்கேடானது. இது தலித்துகள், ஏழை எளிய மற்றும் பெண்ககள், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான சாதிய பாகுபாடு மற்றும் அநீதிக்கு அடித்தளமிடுகிறது” என்று கூறினார்.

முன்னதாக, ‘ஏழை எளிய மற்றும் பெண்களின் கல்வி வளா்ச்சிக்கு தடை விதிக்கும் கருத்துகளைக் கொண்ட மனுஸ்மிருதியை பாடங்களில் சோ்ப்பது கண்டனத்துக்குரியது. இது அரசமைப்பின் அடிப்படை விதிகளை மீறும் நடவடிக்கையாகும்’ என அனைத்து தரப்பிலும் விமர்சிக்கப்பட்டது. சமூக ஜனநாயக ஆசிரியா்கள் முன்னணி (எஸ்டிடிஎஃப்) கண்டனம் தெரிவித்ததுடன் போராட்டங்களையும் நடத்தியது. இது பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கவலையடையச் செய்தது.

மனுஸ்மிருதி பாடங்களை உள்ளீடு செய்து அரசமைப்பைச் சீா்குலைக்கும் ஆா்எஸ்எஸின் கொள்கைக்கு பிரதமா் மோடி வடிவம் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த முன்னெடுப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில மற்றும் மாவட்ட அளவில் போராட்டங்களும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com