இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

பத்மஸ்ரீ விருது பெறவுள்ள பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்டு!

பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானை, சென்னை ஏ.எம் ஜெயின் கல்லூரி கௌரவித்துப் பாராட்டியது.

பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்டு!

Updated On :

சென்னை: பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானை, சென்னை ஏ.எம் ஜெயின் கல்லூரி கௌரவித்துப் பாராட்டியது.

பறை இசை என்ற தமிழ்நாட்டின் தொன்மையான, பாரம்பரிய கலையை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் சிறப்பான பங்களிப்பிற்காக மதுரையைச் சேர்ந்த வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி (ஏ.எம் ஜெயின் கல்லூரி) இசைக் கலைஞர் வேலு ஆசானை பாராட்டி கௌரவித்திருக்கிறது.

இந்த கல்லூரியின் ஊடகவியல் துறை "பறை ஒலி வழியாக தகவல் பரிமாற்றம் - 25" என்ற தலைப்பில் வேலு ஆசானுடன் ஒரு கலந்துரையாடல் அமர்வையும் ஏற்பாடு செய்திருந்தது.

கல்லூரியின் மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு இசைக் கலைஞருடன் உரையாடல் நிகழ்த்தினர்.

மாணவர்களிடம் உரையாற்றிய வேலு ஆசான் , 'தற்கால அறிமுக செயல்பாடுகள் காட்சி ஊடக செயல்பாடுகளை கிராஃபிக்ஸ், புகைப்படம், அனிமேஷன் ஆகிய துறைகளுக்குள் பெரும்பாலும் கட்டுப்படுத்தி விடுகின்ற சூழலில், காட்சி வெளிப்பாட்டின் அடித்தளம், நிகழ்த்து கலைகளில் உள்ளது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். நடனம் மற்றும் இசையின் தொன்மையான கலவையான பறை, ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக இருக்கிறது. இந்த காட்சி ஊடக தகவல் பரிமாற்றமானது, நிலையான உருவங்களை மீறி, சிக்கலான சிந்தனைகளைத் தெரிவிக்கின்ற, சமூகப் பிளவுகளை இணைக்கின்ற மற்றும் அனைத்துத் துறைகளிலும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் ஒரு ஆற்றல்மிக்க மொழியை உள்ளடக்கியது.

நிகழ்த்து கலைகள், கடந்த காலத்தின் நினைவுச் சின்னங்கள் அல்ல; எந்த யுகத்திலும் தகவல் தொடர்புக்கும், பரிமாற்றத்திற்கும் இன்றியமையாத கருவிகள் என்பதை பறை இசையின் நீடித்து நிலைக்கும் ஆற்றலும், அதன் பண்பியல்பும் நிரூபிக்கிறது' என்று கூறினார்.

எங்கள் கல்லூரி எப்போதும் கலாசார வெளிப்பாட்டின் பாதுகாவலனாக அதனைத் தொடர்ந்து ஆதரித்து வருவதாக ஏ.எம் ஜெயின் கல்லூரியின் செயலாளர் உதன் குமார் சோர்டியா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் இணைச் செயலாளர் ஹேமந்த் பி. சோர்டியா, முதல்வர் டாக்டர் பி. மகாவீர், டீன் டாக்டர் எம்.எம். ரம்யா, துணை முதல்வர் டாக்டர். எஸ். அனந்த கிருஷ்ணன், துணை டீன் டாக்டர் சுரேகா, பிரவீன் குமார், பேராசிரியர் கவித்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலு ஆசான்

மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், பாரம்பரிய தாளக் கலையான பறை இசைக்கு அவர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ விருதினை ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள விழாவில் வழங்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இவர் தமிழ்நாட்டின் மிக முக்கியமான பறை இசைக்குழுக்களில் ஒன்றான அலங்காநல்லூர் தப்பிசைக் குழுவின் நிறுவனர். 2010-ல் சமர் என்ற தனது இசைக் குழுவை நிறுவினார். சீனா, அமெரிக்கா, துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ்நாட்டின் பறை இசையை சர்வதேச பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அவரது மாணவர்கள், இப்போது தமிழ்நாடு முழுவதும் பரவி, தங்கள் சொந்தக் குழுக்களை உருவாக்கி, உலகளவில் பறை இசையின் இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.