டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஷாருக்கானின் அறிவுரையை நினைவுகூர்ந்த வெங்கடேஷ் ஐயர்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயர் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை நினைவு கூர்ந்துள்ளார்.

News image

படம் | ஐபிஎல்

Updated On :20 மார்ச் 2025, 6:26 pm IST

ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயர் நினைவு கூர்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

வெங்கடேஷ் ஐயர் கூறியதென்ன?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் அண்மையில் நியமிக்கப்பட்ட நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை வெங்கடேஷ் ஐயர் நினைவு கூர்ந்துள்ளார்.

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர் - படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நான் இடம்பெறுவது குறித்து செய்திகள் பேசப்பட்டு வந்தன. அப்போது, நிகழ்காலத்தில் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்தாது, உலகக் கோப்பைத் தொடர் குறித்து யோசிக்கத் தொடங்கிவிட்டேன். கடைசியில், நான் இரண்டையும் தவறவிட்டு விட்டேன். அந்த அனுபவம் என்னுடைய வாழ்வில் திருப்புமுனையாக இருந்தது. நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அதிலிருந்து கற்றுக்கொண்டேன்.

அதன் பின், காயம் காரணமாக 6-8 மாதங்கள் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. அந்த இடைவெளி எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. மிகப் பெரிய விஷயத்தை அடைய வேண்டும் என்பதற்காக நிகழ்காலத்தில் உள்ள விஷயங்களை நாம் பாராட்ட மறந்துவிடுகிறோம். இவை என்னுடைய வார்த்தைகள் அல்ல. இதனை ஷாருக்கான் என்னிடம் கூறினார் என்றார்.

இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 51 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள வெங்கடேஷ் ஐயர் 1,326 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.