மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ஐபிஎல்லின் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி! புதிய விதிகள் என்ன?

ஐபிஎல்லில் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2025, 5:55 pm IST

ஐபிஎல்லில் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரில் தொடக்கப் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய விதிகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றாக கிரிக்கெட் பந்துகளில் எச்சில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள்

அதுமட்டுமின்றி, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு பந்துகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதியின் படி 2-வது இன்னிங்ஸில் 11 வது ஓவருக்குப் பின்னர் 2 வது பந்து பயன்படுத்தப்படும்.

இந்த விதி அதிக பனியின் தாக்கம் காரணமாக பேட்டருக்கு சாதகமான சூழலைக் குறைக்கவும் பந்துவீச்சாளருக்கு சாதகமாக மாற்றவும் இருப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பனியின் தாக்கம் எந்தளவு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து பந்தை மாற்றுவது குறித்து நடுவர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனியின் தாக்கத்தை வைத்து டாஸ் வெல்லும் கேப்டனின் சாதகமான தன்மையை நிலையாக வைப்பதை இந்த விதி நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பிற்பகல் போட்டிகளில் இந்தவிதி பயன்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.