
சீன அதிபர் ஸி ஜின்பிங், மே 7 - 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்குச் செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஸி ஜின்பிங் ஈடுபடவுள்ளார். மேலும், மாஸ்கோவில் நடைபெறவுள்ள வெற்றிநாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.
புதின் உடனான பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, கூட்டாண்மை விரிவாக்கம், ராஜ்ஜிய ரீதியிலான யுக்தி, சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு அரசு மற்றும் துறை ரீதியான ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திடவுள்ளனர்.
இதற்கு முன்பு, 2024 ஆம் ஆண்டு ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸி ஜின்பிங் ரஷியாவுக்குச் சென்றிருந்தார் .
இதையும் படிக்க | சிறு நாணய அளவிலான பேட்டரி அறிமுகம்: ஒருமுறை சார்ஜ் செய்தாலே 50 ஆண்டுகள் நீடிக்கும் திறன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.