திமுக ஆட்சியில் 3,000-வது குடமுழுக்கு திருப்புகழூரில் நடைபெறும்: சேகர்பாபு

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி
sekarbabu
அமைச்சர் சேகர்பாபுகோப்புப்படம்
Updated on
1 min read

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் 3,000-வது குடமுழுக்கு நாகை மாவட்டம் திருப்புகழூரில் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று(திங்கள்கிழமை) தொடக்கிவைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 2,956 கோயில்களில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

நாகை மாவட்டம் திருப்புகழூரில் ஜூன் 5-ம் தேதி 3,000-வது குடமுழுக்கு நடைபெற உள்ளது.

திருக்கோயில் இடங்களை அளவிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 7,560 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். இதன் மதிப்பு 7,671.23 கோடி.

மாநில வல்லுநர் குழுவில் இதுவரை 12,104 கோயில்களுக்கு அனுமதி அளித்திருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com