ஆர்ஜேடியின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு!

பிகாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை கட்சியின் செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு செய்துள்ளது.
ஆா்ஜேடி செயல் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள தனது மகன் தேஜஸ்வி யாதவிடம் நியமனக் கடிதத்தை முறைப்படி மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வழங்கினார்.
ஆா்ஜேடி செயல் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள தனது மகன் தேஜஸ்வி யாதவிடம் நியமனக் கடிதத்தை முறைப்படி மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வழங்கினார்.
Updated on
1 min read

பாட்னா: பிகாரில் தனது செயல் திட்டங்களை மறுசீரமைத்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), பிகாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை கட்சியின் செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு செய்துள்ளது. இது கட்சியின் உயர்மட்டத்தில் ஒரு தலைமுறை மாற்றத்தைக் குறிக்கிறது.

பிகாரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு லாலு குடும்பத்தில் கட்சியில் யாா் அதிகாரம் என்பதில் போட்டி நிலவியது.

இந்த நிலையில், பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ஜேடி தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தனது மகன் தேஜஸ்வி யாதவிடம் நியமனக் கடிதத்தை முறைப்படி வழங்கினார். இந்த நிகழ்வில் அவரது தாயார் ராப்ரி தேவியும் உடனிருந்தார்.

புதிய தேசிய செயல் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ், கட்சியின் அடுத்த தலைவா் என்பது உறுதியாகியுள்ளது.

பிகார் பேரவைத் தோ்தலில் ஆா்ஜேடி தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. தேஜஸ்வி யாதவ் பேரவை எதிா்க்கட்சித் தலைவராகத் தொடா்கிறாா்.

புதிய தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி யாதவ் தோ்வு செய்யப்பட்டுள்ளது கட்சியின் எக்ஸ் பக்கத்தில் "புதிய சகாப்தத்தின் விடியல்! தேஜஸ்வி யாதவ் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The Rashtriya Janata Dal on Friday appointed former Bihar deputy chief minister Tejashwi Yadav as its national working president, marking a generational transition at the top of the party as it recalibrates its strategy in Bihar.

ஆா்ஜேடி செயல் தலைவராக தோ்வு செய்யப்பட்டுள்ள தனது மகன் தேஜஸ்வி யாதவிடம் நியமனக் கடிதத்தை முறைப்படி மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வழங்கினார்.
வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com