உங்கள் தலைமுடி கருப்பாக இல்லை என்ற கவலை இனி வேண்டாம்! 

நமக்கு தலைமுடி கருப்பாக இல்லை என்றாலே உடனே முதுமை வந்து விட்டதாக ஒரு உணர்வு தொற்றிக் கொள்கிறது.
உங்கள் தலைமுடி கருப்பாக இல்லை என்ற கவலை இனி வேண்டாம்! 

சமீபத்தில் தினமணி வாசகி ஒருவர் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு என்னுடன் பேசினார். 'உங்களால் நான் தொழில்முனைவோர் ஆகிவிட்டேன். நன்றி'' என்றார்.

 நான் ஆர்வமாக, "என்ன தொழில் செய்கிறீர்கள்?'' என்றேன்.

அதற்கு அவர், "நீங்கள் கூறும் தொழில்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. ஆனால் என்னால் கொஞ்சம் கூட முதலீடு போட முடியாத சூழல் இருந்தது. ஏதேனும் செய்ய வேண்டும் என வாரா வாரம் தினமணியுடன் இணைப்பாக வெளிவரும் மகளிர் மணியைப் படித்துக் கொண்டே வருகிறேன். ஒரு வாரம் நீங்கள் கூறியது போன்று இயற்கை ஹேர் டை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். என்னுடைய செலவுக்கு பணம் கிடைக்கிறது. மேலும் இதில் கூறப்பட்டுள்ள மூலப் பொருள்கள் யாவுமே எங்கள் ஊரில் இயற்கையாக கிடைப்பதால் அவற்றை கொண்டு இயற்கை ஹேர் டை தயாரித்து விற்பனை செய்வதாகவும் கூறினார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. மறுபடியும் அதைப் பற்றி விரிவாக இந்த வாரம் இங்கே தருகிறோம். அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா .

நமக்கு தலைமுடி கருப்பாக இல்லை என்றாலே உடனே முதுமை வந்து விட்டதாக ஒரு உணர்வு தொற்றிக் கொள்கிறது. பலதரப்பட்ட ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துவதைக் காட்டிலும் நம்ம ஊரில் கிடைக்கும் பச்சிலைகளை கொண்டு தயாரித்ததை உபயோகிப்பதால் பக்கவினளைவுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். அதனால் இதனை விற்பனை செய்யும் போது இரண்டு பேக் தனித்தனியே பேக் செய்யுங்கள். பின், அதன் செய்முறையை அதில் பிரிண்ட் போட்டு வையுங்கள். நல்ல தரமான பொருளை விற்பனை செய்த சந்தோஷம் கிடைக்கும்.

இதற்கு தேவையான பொருட்கள்: மருதாணி, நெல்லிமுள்ளி, கரிசலாங்கன்னி, கறிவேப்பிலை அனைத்தையும் சம அளவு எடுத்து நன்கு காயவிட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அவுரி இலையை தனியே காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை: முதல்நாள் அவுரி இலை தவிர மற்ற அனைத்தையும் டீ டிக்காஷனில் ஊறவிடவும். மறுநாள் அதை தலையில் போட்டு ஒரு மணிநேரம் ஊறவிடவும். பிறகு நன்கு தலையை அலசி காய விடவும். பிறகு அவுரி இலை பொடியைத் தண்ணீரில் கரைத்து தலையில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின் அலசவும். இதை வாரம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை என சிறிது காலம் பயன்படுத்தவும். பிறகு மாதம் ஒருமுறை பிறகு இரண்டு மாதம் ஒருமுறை என பயன்படுத்தினாலே போதுமானது.

- சுய தொழில் ஆலோசகர் உமாராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com