தமிழர் ஸ்பெஷல் பாரம்பரிய தின்பண்டங்கள் அத்தனையும் ஒரே இடத்தில் பெற நேட்டிவ் ஸ்பெஷல்.காம் வாங்க!

திரு. பார்த்திபன் அவர்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக உதயமானது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணைய தளம்.  தமிழர் பாரம்பரிய தின்பண்டங்கள்அனைத்தையும் ஒரே குடையின்
தமிழர் ஸ்பெஷல் பாரம்பரிய தின்பண்டங்கள் அத்தனையும் ஒரே இடத்தில் பெற நேட்டிவ் ஸ்பெஷல்.காம் வாங்க!

பகையும் விரும்பும் தனிச் சுவை கொண்டது நமது தமிழ் மட்டுமல்ல, அம்மொழி கொண்ட நிலத்தின் பண்டங்களும் தான். இன்றைக்கும் உலகின் எந்த சுவைக்கும் சரி நிகர் சவால் விடும் திறன் கொண்டவை நமது மனோகரமான ருசி மிக்க தின்பண்டங்கள்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்டங்கள் இன்று வரை உலகப் பொது அரங்கில் தனக்கான அடையாளத்தினை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத நிலையில் தான் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் நம் வீட்டிலும் கூட இவற்றிற்கான இடம் அருகிக் கொண்டு தான் வருகிறது.

இத்தகைய சூழலை தனது வெளிநாட்டு அலுவல் காலங்களில் பல சந்தர்ப்பங்களில் எதிர் கொண்ட திரு. பார்த்திபன் அவர்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக உதயமானது நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணைய தளம்.  தமிழர் பாரம்பரிய தின்பண்டங்கள்அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொணர்ந்து அதனை மக்களிடம் சேர்க்கும் இமாலய முயற்சியின் துவக்கப் புள்ளிதான் அது.  அதன் பின் இவரது தம்பி மற்றும்  நண்பரின் கூட்டு முயற்சியால் இன்று வெள்ளியணை அதிரசம், பள்ளபட்டி பூந்தி, முதலூர் மஸ்கோத் அல்வா, ஊத்துக்குளி நெய் பிஸ்கட் முதல் தூத்துக்குடி குச்சிமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு தாண்டி இன்னும் பல ருசிகரமான தின்பண்டங்கள் வரை, தங்களின் இணையத்தில் சேர்த்துள்ளனர்.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இந்தியா மட்டும் இன்றி, அமெரிக்கா, ஐரோப்பா, அமீரகம், கனடா என பல நாடுகளுக்கும் வெற்றிகரமாக டெலிவரி செய்கின்றனர். இன்று நமது ஊரின் பாரம்பரிய ருசியினைச் சுவைக்க நினைப்பவர்கள் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்தால் போதும்.

மூவரும் கை நிறைய வருவாய் ஈட்டும்  தகவல் தொழில்நுட்பத்துறை வேலையில் இருந்தும் தங்களின் நோக்கத்தினை முதன்மையாகக் கொண்டு தங்கள் உயர் சம்பள வேலையினை உதறிவிட்டு முழு நேரமாக நேட்டிவ்ஸ்பெஷல்.காம் (https://nativespecial.com) இணையத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.  பொருளாதார பலமற்ற விவசாய பின்னணியில் இருந்து வந்திருந்த போதும் தங்களின் நோக்கில் தெளிவாகவும், உறுதியும் கொண்ட காரணத்தால் தான் இத்தகைய முடிவினை எடுக்க இயன்றதாக இவர்கள் கூறுகின்றனர்.

இப்படி தெளிவான நோக்கம் கொண்ட ஒரு புதிய தலைமுறை தங்களின் வேரினை நோக்கிப் பயணிக்கத் துவங்கி இருப்பது தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரும் நம்பிக்கையாகப் பார்க்கப் படுகிறது. இது போன்ற இளைய தலைமுறையின் முயற்சியினை உறுதியோடு ஊக்குவிப்போம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com