பெரும்பாலும் நமது தென்னிந்திய வீடுகளில் இட்லி, தோசை என்றால் சாம்பார், சட்னி வகைகள், சப்பாத்தி என்றால் உருளைக் கிழங்கு குருமா, நவரத்ன குருமா, காளான் கிரேவி, பனீர் கிரேவி என்று வழக்கமாக ஒரே விதமான கிரேவிகளை மட்டுமே செய்து கொண்டிருப்போம். சில நேரங்களில் அந்த மெனுவை நினைக்கும் போது நமக்கு போர் அடிக்கத் தொடங்கி விடும். இதைத் தவிர்க்க நாமே புதிதாகவும், சத்தாகவும் ஏதாவது புது ரெசிப்பி கண்டுபிடித்தால் என்ன என்று தோன்றியதின் பலன் தான் இந்த ரெசிப்பி. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதோடு இது மிக மிக சத்தான கிரேவியும் கூட! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பூரி எனப் பல ஐட்டங்களை இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.