அரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

பாக்கெட்டில் அடைத்த சிப்ஸுக்குப் பதிலாக வீட்டிலேயே மொறு மொறு சிப்ஸ் செய்யலாமா?

ஒருமுறை இப்படிச் செய்து பழகி விட்டோம் என்று வையுங்கள். பிறகு கடைகளில் வாங்கத் தோன்றாது. 

Published On :

தேவையான பொருட்கள்: 

  • வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு - 2 அல்லது 3
  • சமையல் எண்ணெய் - பொறித்தெடுக்கத் தேவையான அளவு
  • உப்பு - சிறிதளவு
  • மிளகாய்த்தூள் - சிறிதளவு
  • பெருங்காயத்தூள் - சிறிதளவு 
  • கறிவேப்பிலை- 1 கைப்பிடி

செய்முறை:

கடையில் நல்ல மொந்தன் வாழைக்காயாகப் பார்த்து வாங்கி நங்கு கழுவி விட்டு முதலில் நுனியையும் காம்பையும் வெட்டிப் பின் தோல் நீக்கவும். அடுத்து நல்ல கனமான இரும்புக் கடாயில் தேவையான அளவு சமையல் எண்ணெய் விட்டு அது பொரிப்பதற்குத் தோதாகச் சூடானதும் தோல் நீக்கிய வாழைக்காயை கட்டரில் இட்டு ஸ்லைஸ் செய்து அதை எண்ணெயில் போடவும். கடாயில் பொரிக்கும் போது ஸ்டவ்வில் தீயை ஹை ஃபிளேமில் வைத்துப் பொறுமையாகப் பொரித்தெடுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் எதிர்பார்க்கும் கோடன் ப்ரெளன் நிற சிப்ஸ்கள் கிடைக்கும். மறந்தீர்களானால் சிப்ஸ் கருகிப் போய் மொத்த வேலையையும் கெடுத்த விடும். அதே சமயம் சிம்மில் வைத்தும் பொரிக்கக் கூடாது. அப்படிப் பொரித்தால் சிப்ஸ் மொறு மொறுப்பு இல்லாமல் வதக் , வதக்கென அமைந்து சீக்கிரமே நமுத்துப் போகும். எனவே சிப்ஸ் போடும் போது இந்த டிப்ஸ்களை கவனமாகக் கையாள வேண்டும்.

சிப்ஸ்களை வடிகரண்டியில் எண்ணெயை வடித்தெடுத்து ஒரு வாயகன்ற அகலமான சில்வர் அல்லது மண் பாத்திரத்தில் போடவும். சூடு குறையுமுன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு குலுக்கி விட்டு ஒரு டப்பர் வேர் ஜாரில் எடுத்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது சாப்பிடலாம். 

தயிர்ச்சாதத்துக்கு சிப்ஸ் நன்றாக இருந்தாலும் பொதுவாக புளியோதரை, தக்காளிச் சாதம். தேங்காய்ச் சாதம், பிரியாணி, சாம்பார் சாதம், நெய் விட்ட பருப்புச் சாதம் என அனைத்து விதமான கலந்த சாதங்களுக்கும் வீட்டிலேயே சொந்தமாக நாம் தயரித்த இந்த சிப்ஸ்கள் மிக அருமையான காம்பினேஷனாக இருக்கும்.

குழந்தைகளுக்கு பள்ளிக்குக் கொடுத்தனுப்ப ஸ்னாக்ஸ் வகையறாக்களாக கடைகளில் பாக்கெட் செய்து வைத்திருக்கும் கண்ட, கண்ட சிப்ஸ்களைப் பயன்படுத்துவதை விட இப்படி நமக்கு நாமே திட்டம் போல நம் சொந்தக் கைகளால் படு சுத்தமாகவும், ஆரோக்யமாகவும் வீட்டிலேயே வாழைக்காய் அல்லது உருளை சிப்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம்.

ஒருமுறை இப்படிச் செய்து பழகி விட்டோம் என்று வையுங்கள். பிறகு கடைகளில் வாங்கத் தோன்றாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.