மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வீட்டிலேயே சுத்தமான ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

இந்த தேங்காயெண்ணெயின் சிறப்பே அது வீட்டுத்தோட்டத்தில் விளைந்து நன்கு முற்றிய ஆர்கானிக் தேங்காய் என்பது தான். எனவே வீட்டில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆசை இருப்பவர்கள்

News image
Updated On :30 மார்ச் 2018, 9:34 am

கஸ்தூரி ராஜேந்திரன்

தேவையான பொருட்கள்: 

  • வீட்டுத் தோட்டத்தில் விளைந்த நன்கு முற்றிய தேங்காய்: 3
  • அகலமான பாத்திரம் - ஒன்று
  • தேங்காய் உடைத்து சில்லுகள் எடுக்க கத்தி: 1
  • வடிகட்ட வெள்ளைக் கதர்த்துணி- அரை மீட்டர்

செய்முறை:

நன்கு முற்றிய தேங்காய்களை நார் உறித்து எடுத்துக் கொண்டு. தேங்காயின் கண் உள்ள இடத்தில் கத்தியால் பதமாகக் கீறி அதன் வழியே தேங்காயில் இருக்கும் அமிர்தம் போன்ற நீரை வடிகட்டில் ஒரு பாத்திரத்தில் அருந்துவதற்காக எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த நீரை திருமணமாகாத இளம்பெண்கள் தவிர ஏனையோர் தாராளமாக அருந்தலாம் என்கிறார்கள் வயதில் மூத்தவர்கள். அதற்கு ஏதாவது காரணமிருக்கலாம், அதைப் பற்றித் தனியாக அலசி ஆராய்வோம். இப்போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிக்க வேண்டுமில்லையா?

Story image

தேங்காயில் உள்ள நீரை வடிகட்டிய பின் அதை உடைத்து சில்லுகளாக எடுத்து வைத்துக் கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய துண்டுகளில் சிறிது, சிறிதாக நீர் விட்டு நன்கு நைஸாக அரைத்து தேங்காய்ப் பாலை ஒரு வெள்ளைத்துணியால் வடிகட்டி எடுக்க வேண்டும். வெள்ளைத்துணியால் நன்கு அழுத்திப் பிழிந்தெடுத்த பின் ஓரிரவு முழுதும் அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் மூடி வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் பாத்திரத்தின் மேற்புறத்தில் நமக்கு எண்ணெய் காய்ச்சத் தேவையான தெளிவு படிந்திருக்கும்.

Story image

அதை ஒரு கரண்டியின் உதவியால் மெதுவாக வழித்து வேறொரு ஜாடியில் சேகரிக்க வேண்டும். இந்த ஜாடியை மைக்ரோ வேவ் ஓவனிலோ அல்லது கேஸ் அடுப்பிலோ வைத்துக் காய்ச்சினால் நமக்குத் தேவையான சுத்தமான சுகாதார முறையில் தயாரிக்கப் பட்ட தேங்காய் எண்ணெய் கிடைத்து விடும்.

Story image

இந்த தேங்காயெண்ணெயின் சிறப்பே அது வீட்டுத்தோட்டத்தில் விளைந்து நன்கு முற்றிய ஆர்கானிக் தேங்காய் என்பது தான். எனவே வீட்டில் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆசை இருப்பவர்கள் வீட்டுத் தோட்டத்தில் தென்னை இருந்தால் மட்டுமே முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் மரச்செக்கு வைத்து எண்ணெய் ஆட்டி விற்பனை செய்யும் இடங்களுக்கே நேரில் சென்று உங்கள் கண்ணெதிரே தேங்காய்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அரைத்துத் தரச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம். 

இப்படி வீட்டில் தயாரிக்கையில் அதன் அளவு குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த எண்ணெயையும் நாம் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.