இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெங்களூரில் அக்டோ 22 முதல் 30 வரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காந்தி புகைப்படங்களின் கண்காட்சி! 

கண்காட்சிக்கு  திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அக்டோபர் 30 வரை பிற நாட்கள் அனைத்திலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு.  

News image
Updated On :20 அக்டோபர் 2016, 6:36 am

தினமணி

மகாத்மாவின் பேரன் கனு காந்தி தனது தாத்தாவும் நமது தேசப் பிதாவுமான காந்திஜியை தனது பல்வேறு புகைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் அனைத்துமே காந்தி ஆர்வலர்களால் இன்று சரித்திர முக்கியத்துவம் பெற்றவையாக நோக்கப்படுகின்றன. இந்தப் புகைப்படங்களை மையமாக வைத்து பிரபல வரலாற்று ஆசிரியரும் சூழலியல் ஆர்வலருமான ராமச்சந்திர குகா ”காந்தியின் அகப் புகைப்படங்களின் முக்கியத்துவம்”எனும் தலைப்பில் விளக்கமாகப் பேசவிருக்கிறார். காந்தி புகைப்படங்களின் தொகுப்பான இந்தக் கண்காட்சியை இந்திய அரசின் கலைத்துறையின் சார்பில் பெங்களூரு தேசிய மாடர்ன் ஆர்ட் கேலரியுடன் இணைந்து புது டெல்லி நாசர் ஃபவுண்டேஷன் நடத்தவிருக்கிறது. 

கண்காட்சி துவக்கம்: 22.10.2016 மாலை 6 மணி.
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
தேதி: அக்டோ 22 முதல் 30 வரை
அட்ரஸ்: நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட் பெங்களூரு, ஆடிட்டோரியம், 49, மாணிக்ய வேலு மேன்ஷன், பேலஸ் ரோடு, பெங்களூரு.
இந்தக் கண்காட்சிக்கு  திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர அக்டோபர் 30 வரை பிற நாட்கள் அனைத்திலும் பார்வையாளர்களுக்கு அனுமதி உண்டு .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.