இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போலராய்டு குளிர் கண்ணாடிகளின் பிராண்டு அம்பாஸிடர் ஆனார் அனுஷ்கா ஷர்மா!

என்ன செய்வது? மக்களிடையே பொருட்களை தனியாகவும், விளம்பர மாடல்களைத் தனியாகவும் பிரித்து அணுகும் பழக்கம் இல்லை. அவர்கள் பிரபலங்களுக்காக பொருட்களையும், பிராண்ட்களையும் தேர்வு செய்வதால் தான் இப்படி ஒரு பிர

News image
Updated On :6 மார்ச் 2017, 11:10 am

DIN

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கு குளிர் கண்ணாடிகள் என்றால் கொள்ளைப் ப்ரியம். அவருக்கு எப்படி குளிர் கண்ணாடிகளைப் பிடித்திருக்கிறதோ அதே அளவுக்கு ஒரு பிரபல குளிர் கண்ணாடி பிராண்டுக்கும் அனுஷ்கா ஷர்மாவைப் பிடித்து விட்டது. பிடித்தால் என்ன செய்வார்கள்? உடனடியாக தனது பொருளின் பிராண்ட் அம்பாஸடராக அனுஷ்காவை நியமித்து விட்டது சம்பந்தப் பட்ட குளிர் கண்ணாடி நிறுவனம். அந்தப் பிரபல நிறுவனத்தின் பெயர் போலராய்டு. குளிர் கண்ணாடிகளுக்கென்றே நீடித்த நீண்டகாலப் புகழ் கொண்ட நிறுவனம் அது. அதற்குத் தான் அனுஷ்கா பிராண்ட் அம்பாஸிடர்.

வெயில் காலங்களில் மட்டும் தான் கூலர்கள் என்று சொல்லப்படக் கூடிய குளிர் கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. பயணத்தின் காரணமாக நீண்ட நேரமாக வெளியில் இருக்க வேண்டிய சூழல் உள்ளவர்களும் குளிர்கண்ணாடிகள் அணியலாம். கண்களுக்கு இதமாக இருப்பதோடு, பாதுகாப்பாகவும் இருக்கும் என்கிறார் தீபிகா.

பிரபலங்கள் பிராண்ட் அம்பாஸிடராக ஒப்பந்தம் செய்து கொண்ட பொருட்கள் தரமானவையாக இல்லா விட்டால், பொதுமக்கள் பிரபலங்களை குறை சொல்லி வருவதன் பின்னணி குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு அனுஷ்காவின் பதில்;

என்ன செய்வது? மக்களிடையே பொருட்களை தனியாகவும், விளம்பர மாடல்களைத் தனியாகவும் பிரித்து அணுகும் பழக்கம் இல்லை. அவர்கள் பிரபலங்களுக்காக பொருட்களையும், பிராண்ட்களையும் தேர்வு செய்வதால் தான் இப்படி ஒரு பிரச்சினை நீடிக்கிறது. ஆனால் போலராய்டு குளிர் கண்ணாடிகளைப் பொறுத்தவரை பொருளின் தரம் பற்றிய குறைபாடு எதுவும் இல்லை. இந்தியாவில் பல்லாண்டுகளாக சிறந்து விளங்கி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனாங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.