சிறந்த உள்ளடக்கங்களுடன் பலவிதமான செய்திகள் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும்: நடிகை கொங்கனா சென்!

சோனி பிபிசி யில் வெளிவரும் ‘ப்ளூ பிளானெட் 2’, ஒன் ஓஸன் அண்ட் தி டீப்’ போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மிகச்சிறந்த உள்ளடக்கங்களுடன் வெளியாகி சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் சிந்திக்கத் தூண்டுகின்றன
சிறந்த உள்ளடக்கங்களுடன் பலவிதமான செய்திகள் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும்: நடிகை கொங்கனா சென்!

குழந்தைகள் தொலைக்காட்சி சேனல்களைப் பார்ப்பது தவிர்க்கவே முடியாத ஒரு யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம். இம்மாதிரியான நாட்களில் ஊடகங்கள் குழந்தைகளுக்குத் தரமானதும், கருத்துச் செறிவு மிக்கதுமான பலதரப்பட்ட பயனுள்ள செய்திகளைத் தருவது முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. அதை ஊடகங்கள் மறக்கக்கூடாது.

தொடர்ந்து ஒரேமாதிரியான கேளிக்கை செய்திகள் மற்றும் ஷோக்களைக் காட்டிலும் இப்படி விதம் விதமாக சிந்தனையைத் தூண்டும் விதமான பலதரப்பட்ட செய்திகளைக் காணும் போது குழந்தைகளின் சிந்தனை விரிவடைகிறது என்பதோடு பெரியவர்களும் கூட குழந்தைகளோடு இணைந்து சுற்றுச்சூழல் சீர்கேட்டை சமன் செய்வது எப்படி? புவி வெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்துவது எப்படி? இந்தப் பூமியை மக்கள் வாழ உகந்த இடமாகப் பாதுகாப்பது எப்படி? என்பது போன்ற பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலமாக சூழல் மீதான பொறுப்பற்ற தன்மை நீங்கி அதன் மீதான அக்கறை மீட்டெடுக்கப்படுகிறது. சோனி பிபிசி யில் வெளிவரும் ‘ப்ளூ பிளானெட் 2’, ஒன் ஓஸன் அண்ட் தி டீப்’ போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மிகச்சிறந்த உள்ளடக்கங்களுடன் வெளியாகி சிறுவர்களை மட்டுமல்லாது பெரியவர்களையும் சிந்திக்கத் தூண்டுகின்றன. அந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதன் மூலம் பெரிதாக சூழல் மீதான அக்கறையற்றவர்களால் கூட ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு இந்தச் சூழலைக் காப்பது எப்படி என்று சிந்திக்க முடிகிறது. அது தான் அந்த நிகழ்ச்சியின் வெற்றி. இதே மாதிரியான நேர்மறை சிந்தனைகளை குடிநீரைச் சேகரித்தல், நீர் சுத்திகரிப்பு, நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதால் விளையும் நன்மைகள், பயன்படுத்தினால் விளையும் தீமைகள், பேப்பர் நாஃப்கின்களுக்காக வெட்டி வீணடிக்கப்படும் கோடிக்கணக்கான மரங்களைப் பற்றிய கதை என்பது போன்ற தரமான கண்டெண்டுகள் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்  வாயிலாக சூழல் சார்ந்த அக்கறையை நாம் குழந்தைகளிடம் மீட்டெடுக்கலாம். ஒருமுறை இப்படியான உணர்வை குழந்தைகளின் மனதில் ஊட்டி விட்டோம் என்றாலோ அல்லது தட்டி எழுப்பி விட்டோம் என்றாலோ போதும் அது வாழ்நாள் முழுமைக்கும் அவர்களிடம் ஒரு நல்ல பழக்கமாகத் தேங்கி விடும். பிறகு சூழல் சார்ந்தும் தங்களது வாழ்க்கை சார்ந்தும் அவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியானதாகவே அமைந்து விடும்.அதற்காகவேனும் நாம் சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட செய்திகள் குழந்தைகளைச் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  என்கிறார் நடிகையும் ஒரு குழந்தைக்கு அம்மாவுமான நடிகை கொங்கனா சென். 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஐயர், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா உள்ளிட்ட வித்யாசமான திரைப்படங்களில் நடித்துள்ள கொங்கனா சென் பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com