நமது நவநாகரீக இளம்பெண்களில் பலருக்கு இன்னமும் கூட பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினால் இளமையும், அழகும் தொலைந்து விடும் எனும் மனப்பிரமை உண்டு. அப்படித்தான் பல குழந்தைகள் லாக்டோஜன் பேபிகளாக வலம் வந்தார்கள். இனி இப்படியொரு ஆய்வு முடிவைக் கொண்டு போய் அவர்கள் முன் வைத்தால்... குழந்தைப் பேறடையத் தகுதியுள்ள திருமணமான ஆரோக்யமான இளம் தாய்மார்கள் கூட ‘விட்டது தொல்லை, இந்த இண்டர்னெட் யுகத்தில் போய் யார் 10 மாதம் குழந்தையைச் சுமந்து பெற்றெடுத்துக் கொண்டிருப்பது? பேசாமல் ஒரு வாடகைத் தாயை அமர்த்திக் கொண்டு சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியது தான் என முடிவெடுத்து விட்டால் பிறகு உள்ள நன்மையும் போயாச்சு என்றாகி விடும்.