மீஞ்சூரில் உள்ள தனது பள்ளி கட்டிடத்தின் பாழடைந்த நிலை மற்றும் சுகாதாரமற்ற சூழல் குறித்து புகார் அளித்து ஆறு வயது பள்ளி மாணவி தாக்கல் செய்த ரிட் மனுவைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி, பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை சம்மன் அனுப்பியது.
பொன்னேரியில் உள்ள மீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப் பள்ளியின் (தெற்கு) இரண்டாம் வகுப்பு மாணவி ஆர்.பி. ஆதிகை முத்தரசியின் தந்தையான வழக்கறிஞர் A E பாஸ்கரன் என்பவர் தனது மகளை அரசுப்பள்ளியில் சேர்த்து பயிற்றுவிக்க விருப்பம் கொண்டு பொன்னேரி அரசுப் பள்ளியில் சேர்த்தார். ஆனால், தற்போது அங்கு நிலவும் பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற பள்ளிச்சூழல் அவருக்கு ஏமாற்றமளிக்கவே அப்பள்ளியின் 2 ஆம் வகுப்பு மாணவியும் தன் மகளுமான ஆதிகை முத்தரசியை மனுதாரராகச் சேர்த்து பள்ளிக் கல்வி அதிகாரிகளின் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்.
இவர்களது மனுவை ஏற்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் என்.சேஷசாய் ஆகியோர் மனு மீதான விசாரணைக்கு உத்தரவிட்டதுடன்.. ஆக்கிரமிப்பின் கீழ் மீதமுள்ள பள்ளி நிலம்.. பள்ளி நேரத்திற்குப் பிறகு சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக மனுதாரர் கூறியதற்கு தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு தொடக்கக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டனர்.
பள்ளியின் முன் புறம் நிரந்தர பிச்சை எடுக்கும் இடமாக பயன்படுத்தப்படுவதால் அது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன் பள்ளி விவகாரங்களைக் கவனிக்க பல அதிகாரிகள் இருந்தபோதிலும், பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதில் அந்த அரசாங்க அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என்றும் தம் மனுவில் பாஸ்கர் மற்றும் அவரது மகள் ஆதிகை முத்தரசி குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கைத் தீவிரமாக கவனித்த நீதிபதிகள், அரசுக்கு மதுபானக் கடைகளை நிறுவுவதில் மட்டும் தான் ஆர்வம் இருக்கிறதா? அரசுப் பள்ளிகளைப் பராமரிப்பதில் இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.
Related Article
ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பேக்கேஜிங்கிலிருந்து ஒழிக்க டப்பர்வேர் இந்தியா முடிவு!
15 மாதங்களுக்கு முன்பு ஆற்றுக்கடியில் தொலைந்து போன ஐபோன் ‘உயிரோடு’ மீட்கப்பட்ட அதிசயம்!
முதுகில் கட்டிய மூங்கில் கூடையுடன் 10 கிமீ நடந்து சென்று காய்கறி வாங்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி!
நட்ட நடுக்கடல், பெரும்புயல்... 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் தப்பிய மீனவர்!
கூடிய விரைவில் கம்போடியப் பள்ளிகளில் பாடத்திட்டமாகி தினமும் ஒலிக்கவிருக்கிறது திருக்குறள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


