திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

60 நிமிடங்களில் 60 ஆயிரம் திறன்பேசிகள் விற்பனை!

வெறும் ஒரு மணி நேரத்தில் 60 ஆயிரம் போன்கள் அசத்தல் விற்பனை!

News image

நத்திங் - IANS

Updated On :12 மார்ச் 2024, 4:21 pm IST

லண்டனை மையமாக கொண்டுள்ள ‘நத்திங்’ தொழில்நுட்ப நிறுவனம், செவ்வாய்கிழமை அதன் புதிய ‘போன் 2ஏ’ என்கிற திறன்பேசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

அறிமுகப்படுத்திய 1 மணி நேரத்தில் பல்வேறு தளங்கள் மூலம் 60 ஆயிரம் திறன்பேசிகள் விற்பனையானதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நத்திங் நிறுவனம் தெரிவித்தாவது:

அறிமுக விலையாக ரூ.19,999-க்கு வெளியாகியுள்ள போன் 2ஏ, 8ஜிபி + 128ஜிபி, 8ஜிபி+256ஜிபி மற்றும் 12ஜிபி+256ஜிபி ஆகிய வெவ்வேறு மாதிரிகளுடன் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது.

6.7 இன்ஞ் அளவுள்ள அமோலெட் திரை கொண்டுள்ளது. திரை புதுப்பிக்கும் வேகம் 120ஹெர்ட்ஸ் ஆக உள்ளது.

45வாட் வேகமாக சார்ஜ் இயங்க கூடிய வாய்ப்புடன் உள்ளதாகவும் 50 சதவிகித பேட்டரி 20 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.