உடல் எடை குறைய... அலுவலகத்தில் இதைச் செய்யுங்கள்!

சுறுசுறுப்பாக இருக்க உடல் ஆரோக்கியமாக இருக்க அலுவலகத்தில் செய்ய வேண்டிய சில விஷயங்கள்...
கோப்புப்படம்
கோப்புப்படம்ENS
Published on
Updated on
1 min read

உடல் எடை அதிகரிப்பு அல்லது உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்படாதவர்கள் மிகவும் குறைவு எனலாம். அந்த அளவுக்கு உடல் பருமன் பிரச்னையால் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

நவீன கால உணவு முறை, சுற்றுச்சூழல், மரபியல் காரணங்கள் இதற்கு காரணமாக இருக்கிறது. உடல் செயல்பாடுகள் குறைந்ததும் முக்கிய காரணம்தான்.

உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். அதற்கு அன்றாடம் குறைந்தது ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால், இன்றைய பரபரப்பான உலகத்தில் பலருக்கும் உடற்பயிற்சிக்கென்று நேரம் கிடைப்பதில்லை. எனவே, அலுவலகத்திற்குச் செல்லும்போதும் அலுவலகத்திலும் சிறு விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலமாக நீங்கள் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம், உடல் எடையும் குறையும்.

கோப்புப்படம்
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்! ஏன்?

படிக்கட்டுகள்

பெரும்பாலான அலுவலகத்தில் லிப்ட் வசதி இருக்கும், அதனைப் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள்.

ஏன் இடைவேளை நேரங்களில்கூட நீங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம்.

படிக்கட்டுகளில் ஏறும்போது முதலில் சற்று சிரமமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து செய்யும்போது நீங்கள் சுறுசுறுப்பாக உணர்வீர்கள். எளிதாக நீங்கள் ஏறினால் உங்கள் உடல்நிலை சரியாக இருக்கிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி

அலுவலகத்தில் உடற்பயிற்சி செய்ய முடியாது. ஆனால், ஒரு சாதாரண வாக்கிங் செல்லலாம். அலுவலகத்தின் உள்ளோ, வெளியிலோ நடந்து சென்றால் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். 

நீங்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்தால் கண்டிப்பாக அவ்வப்போது எழுந்து சென்று நடக்க வேண்டும்.

காணொலி அழைப்புகள் மூலமாக கூட்டங்கள் இருந்தால், நடந்துகொண்டே பேசுங்கள்.

திரையைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற நேரங்களில் எழுந்து நடக்கலாம்.

கண்டிப்பாக மணிக்கு ஒருமுறை எழுந்து ஓரிரு நிமிடங்கள் நடப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  

கோப்புப்படம்
நீங்கள் ஹெட்ஃபோன் பயன்படுத்துபவரா? அதிகரிக்கும் திடீர் செவித்திறன் இழப்பு! தடுப்பது எப்படி?

அலுவலகத்தில் உங்கள் வாகனங்களை உங்களின் இருப்பிடத்தில் இருந்து முடிந்தவரை தூரமாக நிறுத்துங்கள்.

வாகன நிறுத்தத்தில் இருந்து உங்கள் பணியிடத்திற்கு நடந்து செல்லுங்கள். அதிக தொலைவு கொண்ட வழியையும் பயன்படுத்தலாம். 

போக்குவரத்து

அவ்வப்போது பொதுப் போக்குவரத்திலும் அலுவலகத்திற்கு வரலாம். ஏனெனில், வீட்டிற்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையிலுள்ள தூரம், அதுபோல பேருந்து நிறுத்தத்திற்கும் அலுவலகத்திற்கும் இடையிலுள்ள தூரம் நீங்கள் நடக்க முடியும். 

விளையாட்டு

சில அலுவலகங்களில் வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் இணைந்து விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவதுண்டு. அம்மாதிரியான ஒன்றை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்கெனவே இருந்தால் கலந்துகொள்ளலாம்.

கிரிக்கெட், கால் பந்து என்று ஏதேனும் ஒரு விளையாட்டில் அரை மணி நேரம் கவனம் செலுத்தலாம்.

ஏன் அலுவலக நண்பர்களுடன் இணைந்து வெளியில் சென்றுகூட விளையாடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com