அமெரிக்காவின் குப்பெர்டினோ நகர மேயரானார் இந்தியப் பெண் சவிதா வைத்தியநாதன்!

இந்திய அமெரிக்கப் பெண்ணான சவிதா வைத்தியநாதன். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குப்பெர்டினோ நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சவிதா வைத்தியநாதன்
சவிதா வைத்தியநாதன்

இந்திய அமெரிக்கப் பெண்ணான சவிதா வைத்தியநாதன். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குப்பெர்டினோ நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கம்ப்யூட்டர் தயாரிப்பில் மிகவும் பிரபலமான "ஆப்பிள்' நிறுவனம் அமைந்துள்ளதும் இந்த குப்பெர்டினோ நகரத்தில்தான். இந்த நகரில் வாழ்பவர்கள் அனைவரும் கல்வியறிவில் சிறந்தவர்களாக இருப்பதாக "போர்ப்ஸ்' பத்திரிகை ஒருமுறை வெளியிட்டுள்ளது. 

இந்நகரில் சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வருபவர் சவிதா வைத்தியநாதன். இந்தியப் பெண்ணான இவர், எம்.பி.ஏ. பட்டதாரி. ஆரம்பத்தில் கணித ஆசிரியையாக இங்குள்ள பள்ளியில் பணியாற்றினார். பின்னர், தனியார் வங்கியில் பணியாற்றியதுடன் பல்வேறு சமூகச் சேவைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், குப்பெர்டினோ நகர மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அங்குள்ள மக்களின் அமோக ஆதரவை பெற்ற சவிதா, சமீபத்தில், மேயராக பதவியேற்று கொண்டார். அவரது 19 வயது மகள் அவருக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சவிதாவின் தாயார் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றார். இந்நகரின் மேயராக பதவியேற்ற முதல் இந்தியப் பெண் என்ற வகையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழும் இந்தியர்கள் சவிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com