கர்னாடக இசைப்பாடகரான டி எம் கிருஷ்ணா சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். கர்னாடக இசை 'எலைட்' மக்களுக்கும், ரசிகர்களுக்கும் மட்டுமே சொந்தமானதில்லை. சேரிப்புறத்து இளைஞர்களும், சிறுவர், சிறுமியரும் கூட கர்நாடக இசை கற்றுக் கொண்டு அதை ரசிக்கவும், பாடவும் முடியும் என்று ஆணித்தரமாக நம்பக் கூடியவர் டி எம் கிருஷ்ணா. நம்புவதோடு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சென்னையில் மீனவக் குப்பங்களுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கர்னாடக இசையை அறிமுகம் செய்யவும் அவர் தவறுவதில்லை. இதனால் அவர் மீது சிலருக்கு அதிருப்தி இருந்தாலும் அதை கிருஷ்ணா பொருட்படுத்துவதாக இல்லை.