ஒரு பெளல் எடுத்துக் கொண்டு மேற்கண்ட பொருட்களை எல்லாம் அதில் கொட்டி நன்கு கலக்கவும். கலக்கும் போது பெப்பர் ஸ்ப்ரே தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிளகாய்த்தூள் அலர்ஜி இருப்பின் நாசியை கைக்குட்டையால் கட்டிக் கொண்டு வேலையில் இறங்கவும். இல்லையேல் நீங்கள் தயாரிக்கக் கூடிய பெப்பர் ஸ்ப்ரே முதன்முதலாக உங்களையே பதம் பார்த்து விடக்கூடும். பொருட்கள் அனைத்தும் வினிகரில் நன்கு கலந்த பின் அதை அப்படியே எடுத்து துளி கீழே சிந்தாமல், சிதறாமல் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். ஸ்ப்ரே பாட்டிலின் மூடிப்பகுதி இறுக்கமாக இருக்க வேண்டும். தளர்வாக இருந்தால் பெப்பர் ஸ்ப்ரே சிறிது, சிறிதாகக் கசிந்து தேவையற்ற உபத்ரவத்தை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே ஸ்ப்ரே கலவை பாட்டிலில் இருந்து கசியா வண்ணம் இறுக்கமான மூடியாகத் தேர்ந்தெடுத்து சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். இப்போது நீங்களே உங்கள் கைகளால் தயாரித்த ‘பெப்பர் ஸ்ப்ரே’ ரெடி.