முதலில் ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்துக் கொண்டு லிஸ்ட் போடுங்கள், உங்களுக்குப் பிடித்த சோப் ஃபிளேவர் எது என்று, நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சோப் உங்களுக்குப் பிடித்த ஃபிளேவரில் தான் இருக்கிறதா? உங்களுக்குப் பிடித்த நிறத்தில் தான் இருக்கிறதா? நீங்கள் விரும்பும் சிகப்பழகையும், உடல் நறுமணத்தையும், மென்மையையும், ஆரோக்யத்தையும் தர வல்லதாகத்தான் இருக்கிறதா? என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் பலரது பதிலும் ‘இல்லை’ என்பதாகத் தான் இருக்கக் கூடும். அப்படியானவர்கள் அவரவர்க்குப் பிடித்த குளியல் சோப்களை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடிந்தால் எத்தனை சந்தோஷப் படுவார்கள் என யோசித்துப் பாருங்கள். அதற்கு எங்களால் ஆன சிறு உதவி தான் இந்த ஹோம்மேட் பப்பாயா சோப் தயாரிப்பு பற்றிய எளிய செய்முறை விளக்கம். விருப்பம் இருப்பவர்கள் இதில் கூறப்பட்டுள்ளவாறு தயாரித்துப் பலன் பெறுங்கள்...