பள்ளிச் சிறுவனுக்கு அளித்த பதிலுக்காக சசி தரூரை உச்சி முகரும் நெட்டிஸன்கள்!

‘நான் தொலைக்காட்சியில்லாமல், கணினி இல்லாமல், நிண்டெண்டோ இல்லாமல், பிளே ஸ்டேஷன் இல்லாமல், மொபைல் போன்கள் இல்லாமல் இந்தியாவில் பிறந்து வாழ்ந்ததால் தான் நான் இப்படி இருந்தேன். என்னிடம் இருந்தவை அனைத்தும்
Shashi Tharoor answer to a boy
Shashi Tharoor answer to a boy

கடினமான வார்த்தைப் பிரயோகம் ஒன்றைக் கற்றுத்தரச் சொல்லி சசி தரூரை சிறுவன் ஒருவன் அணுகினான். அச்சிறுவனுக்கு சசி தரூர் அளித்த பதிலால் இன்று இணையம் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.  அப்படி என்ன பதிலைச் சொல்லி விட்டார் சசி தரூர், வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சசி தரூர் தனது ஆங்கில மொழிப் புலமைக்காக அடிக்கடி புகழப்படுவார். உச்சரிக்க மிகக் கடினமான ஆங்கில வார்த்தைகளை தொடர்ந்து தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து நெட்டிஸன்களின் அப்ளாஷ்களை அள்ளிக் கொள்வார். உதாரணத்திற்கு கீழே சில வார்த்தைகளை அளித்துள்ளோம். நாக்கு சுளுக்கிக் கொள்ளாமல் இதை முதல் முறையிலேயே மிகச்சரியாக உச்சரிக்க முடிகிறதா என்று முயற்சித்துப் பாருங்கள். 

  • Hippopotomonstrosesquipedaliophobia

Meaning : The fear of long words.

  • Floccinaucinihilipilification 

Meaning: The action or habit of estimating something as worthless.

  • Lalochezia

Meaning: Emotional relief gained by using indecent or vulgar language

  • Rodomontade

Meaning: Boastful or inflated talk or behaviour

  • Kakistocracy

Meaning: Government by the least suitable or competent citizens of a state.

சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

தனது இலக்கிய அறிவிற்கும் சொல் விளையாட்டிற்கும் பிரசித்தி பெற்ற ஒரே இந்திய அரசியல்வாதியான சசி தரூர் பல சமயங்களில் நிபுணர்கள் கூட கேள்விப்பட்டிராத ஆங்கில கலைச் சொற்களை பயன்படுத்தி வருபவர்.

ஆனால் இந்த முறை, இணையத்தில் வைரல் ஆகிக் கொண்டிருப்பது அவரது இலக்கியச் செறிவு மிக்க வார்த்தைகள் அல்ல. அப்படிப்பட்ட கடினமான கவர்ச்சியான வார்த்தைப் பிரயோகமொன்றை தனக்கு பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்ட ஒருவருக்கு அவரளித்த பதில் தான் இன்று இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

அடடா, சசி தரூர் அப்படி என்ன பதிலைச் சொல்லி விட்டார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஒரு நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு ஐ.சி.எஸ்.இ சிறுவனுக்கு தான் பதிலளித்த வீடியோ ஒன்றை சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சிறுவன் அவரிடம் "நீங்கள் சொல்லகராதி மனிதராக உலகளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதால், இன்று நீங்கள் எனக்கும் கூட்டத்திற்கும் நாங்கள் கற்றுக்கொள்ள ஒரு புதிய வார்த்தையை கற்றுத்தர வேண்டுமென விரும்புகிறேன்."
எனக் கோரிக்கை வைத்தான். 

அதற்கு தரூர் பதிலளித்தார், 

தரூரின் பதிலில் அங்கமர்ந்திருந்த முழுக் கூட்டமும் இடி முழக்கம் போல ஆர்பரித்துக் கைதட்டியது. ஏனெனில், சசி தரூர் அந்தச் சிறுவனுக்கு இந்த உலகின் பழமையானதும், எளிமையானதுமான மிகச்சிறந்த வார்த்தை ஒன்றை அப்போது பரிந்துரைத்திருந்தார். அந்த வார்த்தை என்னவென்றால், அது.. 'READ' என்ற வார்த்தை. அதாவது வாசிப்பு.

அவர் பரிந்துரைத்த வார்த்தையைப் பற்றி மேலும் பேசுகையில் சசி தரூர் சொன்னதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

வாசிப்பதின் மூலம் மட்டுமே தாம் இத்தகைய விரிவான சொற்களஞ்சியத்தைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் ’நான் ஒருவித நட்கேஸ் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஏதோ நான் நாள் முழுவதும் அகராதிகளைப் படித்துக் கொண்டிருப்பவன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் என் வாழ்க்கையின் பெரும்பாலான நாட்களில் அகராதியைத் திறக்காதவர்களில் ஒருவனாகவே இருக்கிறேன். இங்கே முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது அகராதியைப் பற்றி அல்ல. நான் விரிவாக வாசிக்கக் கூடியவன்.

எப்படி தெரியுமா? எனக் கேட்டு வாசிக்கும் பழக்கத்தை தன்னால் எவ்வாறு கட்டியெழுப்ப முடிந்தது என்ற கதையையும் அவர் அந்தச் என்று சிறுவனிடம் சொல்லத் தொடங்கினார். ‘நான் தொலைக்காட்சியில்லாமல், கணினி இல்லாமல், நிண்டெண்டோ இல்லாமல், பிளே ஸ்டேஷன் இல்லாமல், மொபைல் போன்கள் இல்லாமல் இந்தியாவில் பிறந்து வாழ்ந்ததால் தான் நான் இப்படி இருந்தேன். என்னிடம் இருந்தவை அனைத்தும் புத்தகங்கள் மட்டுமே, எனவே நான் விரிவான வாசிப்புப் பழக்கத்தை மேற்கொண்டேன்’

இவ்விதமாகச் சிறுவனுக்கு சசி தரூர் பதிலளிக்கும் வீடியோ ட்விட்டரில் பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் எம்.பி. தனது அறிவை மிகவும் நேர்மையாக பகிர்ந்து கொண்டதற்காக நெட்டிசன்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com