வயது வித்தியாசமின்றி இன்று அனைத்து தரப்பினரும் இன்று மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். வாழ்க்கை முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம்.
அந்தவகையில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட பல வழிகளில் முயற்சிக்கிறோம். மனநல நிபுணர்களும் மருத்துவமனைகளும் கூட தற்போது அதிகரித்துவிட்டன.
அதுவும் இந்த கரோனா காலத்தில் மன அழுத்தத்திற்கு ஆளானோர் அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட மருத்துவர்கள் சிலர் கூறும் வழிகள்:
1. மனதில் உணர்ச்சிகள் மேல் எழும்பும்போது அவற்றை கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். மனம் உங்களின் கட்டுப்பாட்டை விட்டுச் செல்லும்போது அந்த உணர்வை உடனடியாக நிறுத்திவிட்டால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
2. மன அழுத்தம் ஏற்படும்போது உங்கள் முகத்தை ஒரு நிமிடம் குளிர்ந்த நீரில் வைத்து மூச்சை அடக்க வேண்டும். பின்னர் முகத்தை வெளியே எடுத்து மூச்சை வெளியே விட வேண்டும்.

இதையும் படிக்க | தலைக்கு குளிக்கும்போது இந்த 5 விஷயங்களைச் செய்யாதீர்கள்!
3. உடல் முழுவதையும் இயக்கத்தில் வைக்கக்கூடிய ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்யலாம். வேகமாக சுவாசிக்கும்போது உடலில் உள்ள தசைகள் தளர்வடையும். இதனால் மன அழுத்தம் குறையும்.
4. ஒரு 30 நிமிடம் வெளியே சென்று சூரிய வெளிச்சத்தை உள்வாங்குவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உடலில் சூரிய வெளிச்சம் படும்படி உட்கார்ந்திருக்கலாம் அல்லது நடக்கலாம். சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று கூறுவதன் அடிப்படை இதுவே.
5. குடும்பத்தினர், நண்பர்களுடன் இணக்கமாக இருப்பதும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும். தனிமையில் இருக்கும்போதுதான் மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. உடன் ஒருவர் இருந்தால் அவருடன் பகிரும்போதும் அவர் ஆறுதல் தெரிவிக்கும்போதும் மன அழுத்தம் குறைகிறது.
6. மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது என்பதை சில நிமிடங்கள் அமைதியாக சிந்தித்து முதலில் கண்டறியுங்கள். மன அழுத்தத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டால் மட்டுமே அதில் இருந்து விடுபட முடியும்.
7. பொதுவாக மிகவும் சிறிய விஷயத்திற்காகத்தான் மன அழுத்தம் ஏற்படும். இதற்காக மூச்சுப்பயிற்சி செய்யலாம். ஓர் அமைதியான சூழ்நிலையில் மூச்சை நன்றாக உள் இழுத்து வெளியே விட வேண்டும்.

8. உங்களுக்கு நன்றாக அறிமுகமானவரால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படின், அவரிடம் பேசி பிரச்னையை சரிசெய்ய முற்படுங்கள். இல்லையெனில் அவர் செய்த தவறுக்காக மன்னித்து விட்டுவிடுங்கள்.
9. மன அழுத்தம் ஏற்படும்போது மனதை ஒருநிலைப்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக 10 லிருந்து 1 வரை தலைகீழாக எண்ணலாம், உங்களுக்குப் பிடித்த வண்ணங்களை வரிசைப்படுத்தலாம். இவ்வாறு ஏதேனும் ஒரு சிந்திக்கும் பயிற்சியை செய்து வருவது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
10. எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு. அவரவருக்கு பிடித்த மன நிறைவைத் தரும் விஷயங்கள் உண்டு. அந்தவகையில் நீங்கள் உங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்யலாம். எதுவுமே இல்லை என்றால், உங்கள் மனதில் உள்ளவற்றை ஒரு பேப்பரில் எழுதித் தள்ளிவிடுங்கள். மனம் இலகுவாகும்.
முன்னொரு காலத்தில் எல்லாம் மன அழுத்தம் என்ற ஒரு விஷயமே பெரிதாக பேசப்படுவதில்லை. இப்போது மன பாதிப்பு அதிகரித்து வருவதும் அதுகுறித்து பேசுவதற்கு ஒரு காரணம். மன அழுத்தம் ஏற்படும் அதே வழியில் அதனைத் தீர்ப்பதற்கும் ஒரு வழி இருக்கின்றது. உங்களுக்கான பிரச்னைகளைக் கண்டறிந்து களைதலே மன அழுத்தத்தைத் தீர்க்கும். ஆரோக்கியமான உடல்நலனுக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் மன ஆரோக்கியம் அவசியம் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
Related Article
காதலர் தினத்தைக் கொண்டாட நீங்க ரெடியா?
'பெட்' காபி/டீ குடிப்பவரா நீங்கள்?
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய 5 முக்கிய பண்புகள்!
குழந்தைகளுக்கு எந்த வயதில் கற்றுக்கொடுக்கத் தொடங்க வேண்டும்?
டார்க் சாக்லேட் சாப்பிடுவது நல்லதா?
மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

