தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்! தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? - நம்பிக்கையும் உண்மையும்!

பெண்களுக்கு பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? - மருத்துவர் பதில்.

News image

கோப்புப்படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 5:42 pm IST

பெண்களுக்கு பிசிஓஎஸ் எனும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்னை இருந்தால் கருத்தரிக்க முடியாதா? ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால் பிசிஓஎஸ் என்று அர்த்தமா?

இதுபோன்று பிசிஓஎஸ் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு விளக்கமளிக்கிறார் புவனேஸ்வரத்தின் மணிபால் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஹர்ப்ரீத் கௌர்.

தவறான நம்பிக்கைகளும் உண்மையும்

சினைப்பை நீர்க்கட்டிகள் இருந்தால், அவருக்கு பிசிஓஎஸ்(PCOS) எனும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் குறைபாடு உள்ளது.

பிசிஓஎஸ் குறைபாடு உள்ள பல பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதில்லை. அதாவது நீர்க்கட்டிகள் இருந்தாலே பிசிஓஎஸ் குறைபாடு இருப்பதாக அர்த்தமல்ல.

அதிகப்படியான ஆண்ட்ரோஜன் சுரப்பு (முகங்களில் முடி, முகப்பரு, முடி உதிர்தல் ஆகிய அறிகுறிகள்), ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தாலும் பிசிஓஎஸ் பிரச்னை இருக்கும். இத்துடன் சினைப்பை நீர்க்கட்டிகளும் இருக்கலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தாலே அது பிசிஓஎஸ் குறைபாடு ஆகும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு பல காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களில் பிசிஓஎஸ் என்பது ஒரு காரணம் மட்டுமே. மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாள்கள் வரை இருக்கலாம். தைராய்டு கோளாறுகள், புரோலாக்டின் சுரப்பில் பிரச்னைகள், கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள்(ஃபைப்ராய்டுகள்), தாய்ப்பால் சுரப்பு, அதிகப்படியான டயட் அல்லது உடல் பருமன் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

பிசிஓஎஸ் இருந்தால் கர்ப்பமாக முடியாது

பிசிஓஎஸ் என்பது கருவுறாமைக்கு ஒரு பொதுவான காரணம். இந்த ஹார்மோன் பிரச்னை, கருவுறுவதற்கு முட்டையை வெளியிடும் சினைப்பையின்(ovary) திறனைப் பாதிக்கிறது. ஆனால், இயற்கையாகவும் கருத்தரித்தல் நிகழ வாய்ப்புள்ளது. சிலர் மருந்துகளைப் பயன்படுத்தியும் கருத்தரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.