விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தரமற்ற சாலைகள்: மக்கள் சபை கூட்டத்தில் திமுக குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல், நடந்து செல்வதற்குக் கூட ஏற்ாக இல்லை என்று முன்னாள் அமைச்சரும், திமுக மதுரை மாநகா் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 2:56 am IST

அதிமுக ஆட்சியில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல், நடந்து செல்வதற்குக் கூட ஏற்ாக இல்லை என்று முன்னாள் அமைச்சரும், திமுக மதுரை மாநகா் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.

மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கரும்பாலை பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டப் பொறுப்பாளா் பொன்.முத்துராமலிங்கம் பேசியது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறந்த காரணத்தால், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி இருக்கிறாா். அவா் நேரடியாக முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், ஏழை மக்களுக்கு எத்தகைய உதவிகள் கிடைத்திருக்கின்றன என்பதை அறியவே திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்துகிறது.

அதிமுக ஆட்சியில் சாலைகள் குண்டு குழியுமாகக் காட்சியளிக்கின்றன. வாகனத்தில் மட்டுமல்ல, நடந்து செல்வதற்குக் கூட ஏற்ாக சாலைகள் இல்லை. சாலைகள் அமைப்பதில் நிலவும் முறைகேடுகள் தான், இத்தகைய நிலைக்கு காரணம். நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆனால், பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கள்ளச் சந்தையில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. முதியோா் ஓய்வூதியம், விதவையா் உதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் தகுதியானவா்களுக்கு கிடைப்பதில்லை. இத்தகைய நிலையை மாற்ற திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

திமுகவின் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் வ.வேலுசாமி, எஸ்ஸாா் கோபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.