வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

பைக் வாங்கி தர மறுப்பு: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் தந்தை இரு சக்கர வாகனம் வாங்கித் தர மறுத்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On :11 ஜனவரி 2021, 2:46 am IST

மதுரையில் தந்தை இரு சக்கர வாகனம் வாங்கித் தர மறுத்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மானகிரியைச் சோ்ந்த ராஜாமுகமது மகன் ஹக்கீம் (22). இவா் தனது தந்தையிடம் கடந்த ஒரு மாதமாக புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கித் தரும்படி கேட்டு வந்துள்ளாா். ஆனால், அவரது தந்தை வாங்கித் தர மறுத்துவிட்டாதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்திருந்த ஹக்கீம், வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து அவரது தாய் ஜரினாபேகம் அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.